தேவனுடைய வெகுமதியை ஏற்றுக்கொள்ளுங்கள் Tallahassee, FL USA 53-0219 1சகோதரன் பாக்ஸ்டர், உமக்கு நன்றி. மாலை வணக்கம், நண்பர்களே. நான் இன்றிரவு இங்கே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் நின்று கொண்டிருக்கிறோமே என்ற இப்படிப்பட்ட நிலைக்காக நான் வருந்துகிறேன், ஒவ்வொருவரும் வெளியே-வெளியே வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். என்னை அழைத்து வர என்னுடைய மகன் வந்த போது, அவன், 'ஏன், அப்பா, அவர்கள் சுற்றிலும் எல்லாவிடங்களிலும், வெளியே வீதிகளிலும் மற்றும் எல்லாவற்றிலும் நின்று கொண்டிருக்கிறார்கள்' என்றான். அவன், 'சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம்' என்றான். எனவே நீங்கள் சீக்கிரம், சீக்கிரமாய், துரிதப்பட வேண்டியிருக்கும் போது, அது ஒருவிதத்தில் கடினமாக ஆக்கி விடுகிறது இல்லையா? ஆனால் நீங்கள் இவ்விதமாக நின்று கொண்டிருக்க வேண்டியிருப்பது உங்களுக்கு மோசமாக இருக்கையில் நான் துரிதப்படுவது அவ்வளவு மோசமானது அல்ல, அதைக் குறித்து நான் வருந்துகிறேன். நாங்கள் இங்கே டல்லஸியில் இருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது...?... இங்கே எங்களுடைய ஒவ்வொரு நிமிட நேரத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறோம். ஏதோவொரு நாளில் நான் மீண்டும் உங்களோடு இருக்கும்படி எங்களால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன், நாம் ஆராதனைகளை நடத்தும்படி ஏதோவொரு நாளில் தேவன் நமக்கு ஒரு கூடாரம் அல்லது ஏதோவொன்றைத் தருவார் என்று நாங்கள் உண்மையாகவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் - நம்முடைய ஜனங்கள் வந்து, அவர்களை நம்மோடு இருத்த, நம்முடைய இடங்கள் ஒருக்கால் போதுமான அளவில் பெரிதாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியும் போது, அது ஒருவிதத்தில் கடினமாக உள்ளது. 2நீங்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஊழியக்காரர்கள் எல்லாருக்காகவும், அவர்கள் செய்துள்ளவற்றிற்காகவும் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம், மேய்ப்பர்களின் ஒத்துழைப்புக்காகவும் உங்களுக்கு நன்றி. நீங்கள் சபைக்குச் சென்று, கடினமாக உழைக்கிறீர்கள். தேவனுடைய இந்த மகத்தான நியமங்களை விசுவாசிப்பவர்களைப் போன்ற மனிதர்களாகிய இவர்கள் உங்களுக்குப் போதிப்பவைகள் சத்தியமாயிருக்க வேண்டும், தேவன் வழக்கமாக வந்து அது சத்தியம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே நீங்கள் அதைக் கட்டாயம் விசுவாசித்தாக வேண்டும். அவர்கள் தேவனுடைய மனுஷர்களாக இருக்கிறார்கள். எனவே இந்தக் கூட்டங்களுக்கு உதவி செய்த சகோதரர்களாகிய உங்களுடைய - உங்கள் ஒவ்வொருவருடைய ஆராதனைகளும் எல்லா நேரமும் அதிகமதிகமாய் விருத்தியடையும் என்று நான் நம்புகிறேன். ஜனங்களாகிய உங்களை தேவன் பரிபூரணமாய் ஆசீர்வதிப்பாராக. நான் இதுவரையிலும் அதைக் குறித்து எதுவுமே சொல்லியிராத அநேகம் அநேகமான காரியங்கள் ஆராதனைகளில் செய்யப்பட்டு வருகின்றன. நான் அதை அப்படியே போகும்படி விட்டு விட்டேன். ஆனால் நான் போன பிறகு... நீங்கள் கண்டுகொள்வீர்கள். மேய்ப்பர்களாகிய நீங்கள் இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் போன பிறகு - அதற்குப் பிற்பாடு, ஜனங்கள் இதுவரையிலும் அதைக் குறித்து எதுவுமே அறிந்து கொள்ளாத அநேக காரியங்கள் அங்கே செய்யப்பட்டு வருவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் ஸ்திரீகளும் மனிதர்களும் உங்களிடம் வந்து, 'என்னுடைய வயிற்றுக் கோளாறு போய் விட்டது' என்றும், 'என்னுடைய மூட்டு வீக்கம் (கீல்வாதம்) சுகமாகி விட்டது' என்றும் (கூறுவதை) நீங்கள் கண்டு கொள்வீர்கள். இப்பொழுது, மேய்ப்பரே, அது உண்மை அல்லவா என்று பார்க்கும்படி, அதைக் குறித்து வைத்துக்கொள்ளும். அவர்கள் அவ்வாறு கூறுவதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். 3அவர்கள் எனக்காக ஒரு அன்பின் காணிக்கையை எடுத்ததாக இப்போது தான் என்னுடைய மேலாளர் என்னிடம் கூறினார். நான் அதைப் பாராட்டுகிறேன். நண்பர்களே, ஒரு அன்பின் காணிக்கைக்கு நான் உண்மையாகவே தகுதியுடையவன் அல்ல. நான்-நான் தகுதியுடையவன் அல்ல... ஆனால் நான்-நான் அதைப் பாராட்டுகிறேன், ஏனென்றால் நான் ஆப்பிரிக்காவுக்கும் மற்ற இடங்களுக்கும் போவதற்கு உண்மையாகவே இப்பொழுது பணத்தைத் திரட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதைக்கொண்டு அதைத்தான் செய்வேன். புரிகிறதா? படிப்பறிவில்லாத கருத்த இருளில் இருக்கும் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான ஜனங்கள் கொண்ட ஆப்பிரிக்கா தேசத்துக்கு அது என்னை அனுப்புகிறது. அது சரியான இடத்துக்கே போகும் என்பது எனக்குத் தெரியும்; நான் அதை உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன், அது... அதன் ஒவ்வொரு காசும் (penny) இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாகவே செலவழிக்கப்படும். எவ்வளவு கொஞ்சமாக (இருந்தாலும்)... ஒருக்கால் வீட்டில் ஆகாரத்திற்காகவோ, எனக்குத் தேவையான மளிகைச் சாமான்களுக்காவோ மற்றவைகளுக்காவோ நான் அதில் கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருக்கும், ஆனால் அதற்குப் புறம்பாக எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு காசும் (cent) நேராக வெளிநாட்டு ஊழியங்களுக்குத் தான் போகிறது. அப்படியானால் அதை உறுதிப்படுத்தும் விதமாக நானே போகிறேன், நான் - நானே சரியாக அதை அங்கு கொண்டு சென்று, அதை செலவு செய்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. 4நான் சகோதரன்... அவர்களிடம் கொடுப்பேன். இது பெந்தெகோஸ்தே ஹோலினஸ் சபை என்று இந்த சகோதரியோ அல்லது யாரோ ஒருவரோ இன்று என்னிடம் கூறினார்கள் என்று நம்புகிறேன். இந்த பெந்தெகோஸ்தே ஹோலினஸ் சபையின் மேய்ப்பர் யார்?...?... நீர் தான் மேய்ப்பரா? உங்களுக்கு சகோதரன்...?... அவர்களைத் தெரியும். அது சரிதானே? [சகோதரன் பிரன்ஹாமிடம் ஒரு சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.] அது சரிதானா. நல்லது, அது மிகவும் அருமையாக உள்ளது. நல்லது, அவர் ஒரு... நிச்சயமாகவே, சகோதரன் பிரீமனும், நானும், சகோதரன் பிஷர் அவர்களும், நாங்கள் எல்லாரும் மிக, மிக அருமையான நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அப்படியானால் கர்த்தர் இங்கே எங்களோடு இருந்தார் என்று நான் அவர்களிடம் கூறும் போது, இங்கே இந்த பெந்தெகோஸ்தே ஹோலினஸ் சபையில் ஒரு உண்மையான கூட்டம் எங்களுக்கு உண்டாயிருந்தது என்ற செய்திகளை அவர்களிடம் கொண்டு செல்வதில் நிச்சயமுடையவனாயிருப்பேன். கர்த்தர் உங்கள் எல்லாரையும், உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. 5இப்பொழுது, இன்றிரவு, நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள், நான் ஒரு வேதவாக்கியத்தை சற்று வாசிக்கப் போகிறேன், அதன்பிறகு நாங்கள் சற்று நேரத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்குவோம். நீங்கள் களைப்போடு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். வெளியேயும், கட்டிடத்தின் அடித்தளத்திலும், சுற்றிலும் களைப்போடு நின்று கொண்டிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சரியாக இப்பொழுதே ஏதாவது செய்யக் கூடுமா என்று விருப்பமாயுள்ளேன். நான் எழும்பி, தேவனைத் துதித்துக் கொண்டிருக்கும் இங்கேயுள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க முடிந்து, தேவனை ஸ்தோத்தரித்து, ஒவ்வொருவரும் சுகமடைந்து, வெளியே சென்று, அங்கே எந்த வியாதியஸ்தர்களோ, முடமானவர்களோ, அல்லது யாருமே இல்லாமற் போகும்படியாக அங்கே ஏதோவொன்று அப்படியே என்னுடைய அதிகாரத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்... அவ்வாறு செய்ய நான் விரும்ப மாட்டேனா? ஓ, என்னால் அதைச் செய்யக் கூடுமானால், நான் சரியாக இப்பொழுதே அதைச் செய்வேன். ஆனால் அதைச் செய்யும்படியாக அது-அது எனக்குள் இல்லை. என்னால் அதைச் செய்ய முடியாது. நான் வெறுமனே ஒரு மனிதன் தான். புரிகிறதா? என்னால் செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உங்களுக்காக ஜெபத்தை ஏறெடுப்பதும், சத்தியத்தை உங்களிடம் கூறுவதும் தான். இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள எப்படிப்பட்ட ஜனங்கள் வருகிறார்கள்... அது ஊழியக்காரர்கள் பிரசங்கம் பண்ணியிருக்கிற ஏதோவொன்றாக உள்ளது. அதற்கும் சற்று முன்பு தேவன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார் என்று, ஒருக்கால் உங்கள் மேய்ப்பர்கள் பல வருடங்களுக்கு முன்பே பிரசங்கம் பண்ணியிருக்கலாம். ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர். என்ன சம்பவிக்கும் என்று உங்களுடைய மேய்ப்பர்கள் பிரசங்கம் பண்ணினதை இது உறுதிப்படுத்துவதாக மாத்திரமே இருக்கிறது. அதைச் செய்து கொண்டிருக்கையில், இன்றிரவு நான் தாழ்மையோடு என்னால் (செய்ய முடிந்த) மிகவும் சிறந்ததைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், நான் அதை எவ்வாறு பிரங்கம் பண்ண வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கிறதாக நான் விசுவாசிக்கிற விதமாக சுவிசேஷத்தை உங்களிடம் கொண்டு வரவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளுங்கள், அவ்வாறு செய்வீர்களா? அப்படியானால், இது சரியாக சத்தியம் என்று விசுவாசியுங்கள். 6இப்பொழுது, வெளியிலும், கட்டிடத்தின் அடித்தளத்திலும் இருக்கிற நீங்களும், இந்நேரத்தில் இதைக் காண இயலாதிருக்கிற நீங்களும்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரியில் மற்றவர்களுக்காக பட்ட பாடுகளினாலும் மரணத்தினாலும், உலகத்தில் இருக்கிற எக்காலத்திலும் உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுடைய சுகத்தையும் கிரயத்துக்கு வாங்கிக் கொண்டு விட்டார். இயேசு ஏற்கனவே கிரயத்தைச் செலுத்தி விட்டார், தேவனுடைய பார்வையில், நீங்கள் ஏற்கனவே சுகமடைந்து விட்டீர்கள். அங்கே தேவனுடைய பார்வையில் எந்த வியாதியுமே இல்லை. நீங்கள் ஏற்கனவே சுகமடைந்து விட்டீர்கள். இங்கே உள்ளேயும், வெளியேயும் இருக்கும் ஒவ்வொரு பாவியும், நீங்கள் எங்கே இருந்தாலும், தேவனுடைய பார்வையில், உங்கள் பாவங்கள் இப்பொழுதே உங்களுக்கு மன்னிக்கப்பட்டு விட்டன. ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் உங்கள் மேல் இயேசுவின் இரத்தம் இல்லாமல், ஒரு குமாரனாகவோ, குமாரத்தியாகவோ, அவருடைய சந்நிதியில் வரும் போது, நீங்கள் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று, ஒரு - நீங்கள் அங்கே வரும்போது, 'அதை நீ புசிக்கும் நாளில் சாவாய்.' இப்பொழுது, நீங்கள் அந்த நிலையில் மரிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு பாவியாக இருப்பதைத் தவிர்க்க முடியாது, ஏனென்றால் நீங்கள் ஒரு பாவியாகவே பிறக்கிறீர்கள், ஆனால் ஒரு பாவியாக தொடர்ந்து இருப்பதை உங்களால் தவிர்க்க முடியும்; தேவனுடைய பார்வையில், பாவம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. அவரால் பாவத்தைப் பார்க்க முடியாது. அவர் - அவர் நீதிபரராயும் இராஜாதிபத்தியம் உள்ளவராயும் இருக்கிறார். அவர் நீதியுள்ளவராக இருக்க வேண்டும்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) சரியாக அப்பொழுதே. தேவனால் பாவத்தைப் பார்க்க முடியாது; அவர் பரிசுத்தர். ஆனால் ஒரு காரிலுள்ள முட்டுத்தாங்கியைப் (bumper) போன்று, இயேசுவின் இரத்தமானது அதை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும், அந்த முட்டுத்தாங்கியாகிய இயேசு கிறிஸ்து, உங்கள் பாவம் தேவனை அடையும் முன்னதாகவே உங்கள் பாவங்களில் உங்களை பற்றிப்பிடித்துக் கொள்கிறார். நீங்கள் அவரை நடத்துகிற விதத்துக்காக உங்களுக்கு வெட்கமாயில்லையா? 7நான் ஒருநாள் அங்கே மேலே நோக்கிப் பார்த்து, அவர் எனக்காகச் செய்துள்ளதைக் கண்ட போது, நான் தாழ்மையோடு அவரிடம் சென்றதை நான் நினைவுகூருகிறேன். அங்கே ஒரு புத்தகத்தின் மேல் என்னுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது, ஓ, அதற்குக் கீழே என்ன எழுதப்பட்டிருந்தது. நான், 'கர்த்தாவே, என்னை மன்னிப்பீரா?' என்று கேட்டேன். அவர் வெளிப்படையாக தமது கரங்களை எடுத்து, தம்முடைய பக்கவாட்டில் இட்டு, 'சரி' என்றார். அவர் அந்தப் புத்தகத்தின் குறுக்கே 'மன்னிக்கப்பட்டது' என்று எழுதி, அதை மூடி, அதைத் திரும்ப மறதியின் கடலில் போட்டு விட்டார். அது முதற்கொண்டு நான் சந்தோஷமாக இருந்து வருகிறேன். 'இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார், தேவனுடைய கோபாக்கினை உங்களை நெருங்க விடாமல் தடுக்கிற ஒரே காரியம் அவரே. அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் எனது தாழ்மையான வழியில் என்னால் சிறந்த முறையில் சொல்லும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நீ அவ்வாறு செய்த போது, அவர் - மேலும் அவர் தம்முடைய முதுகில் தழும்புகளைப் பெற்றுக்கொண்டார் (striped), 'அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்,' அல்லது 'நாம் குணமானோம்,' நாம் குணமாவோம் என்றல்ல, நாம் ஏற்கனவே குணமடைந்து விட்டோம். ஒவ்வொரு நபரும் சுகமடைந்து விட்டான். இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், நீங்கள் அதைக் கூறக்கூடும் முன்பே, முதலில் உங்கள் இருதயத்தில் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் வெறுமனே உங்கள் உதடுகளிலிருந்து அதைக் கூறுவீர்கள் என்றால், உங்களுக்கு அது எந்த நன்மையும் செய்யாது. ஆனால்... லிருந்து. பாருங்கள், நாம்... 8இது ஒரு ஆழமற்ற காரியமல்ல. இது... போன்ற ஏதோவொன்றல்ல. கடந்த மாலையில், ஒலிபரப்பு ஒன்றில், யாரோ ஒருவர், 'விசுவாசிக்கிற ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறான்' என்று கூறுவதைக் கேட்டேன். இப்பொழுது, அந்த ஊழியக்காரரோடு எனக்கு கருத்து வேற்றுமை கிடையாது, ஆனால் அவர் - அவர் அநேகமாக அந்த வேதவாக்கியத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில், பவுல் அங்கேயிருந்த அந்த பாப்டிஸ்டு ஜனங்களைப் பார்த்து, அவர்கள் தாங்கள் விசுவாசித்தது முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றார்களா என்று கேட்டான். நீங்கள் விசுவாசித்த போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதல்ல. பரிசுத்த ஆவி என்பது நீங்கள் விசுவாசித்த பிறகு (பெற்றுக்கொள்ளும்) தேவனுடைய ஒரு வரமாக இருக்கிறது. அது உங்களுடைய விசுவாசத்திற்காக உங்களுக்குக் கொடுக்கப்படும் தேவனுடைய வரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள உங்களால் முடிந்தும், அப்பொழுதும் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் இருக்கலாம். பரிசுத்த ஆவியின் வரம் என்பது விசுவாசிக்குரிய தேவனுடைய தனிப்பட்ட வெகுமதியாக இருக்கிறது. நீங்கள் விசுவாசிக்கிற காரணத்தினால், இரட்சிக்கப்பட்டீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய தனிப்பட்ட வரமானது உங்கள் மேல் வரும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியால் நிறையப்படுகிறீர்கள். இப்பொழுது, பாருங்கள், அது ஒரு ஆழமற்ற காரியம் அல்ல. அது ஆழமான ஏதோவொன்று. நாம் இன்னும் குழந்தைகள் அல்ல; நாம் மனிதர்களும் ஸ்திரீகளுமாயிருக்கிறோம். இன்றிரவு சபையானது அந்த நிலையிலேயே இருக்க வேண்டும், ஆழமற்றதாக அல்ல, ஆனால் தேவனுக்குள் ஆழமாக. 9இப்பொழுது, சுகமாகுதல் என்பது நீங்கள் வெறுமனே, 'நல்லது, நான்... ஆமாம், நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்' என்று கூறும் ஏதோவொன்றல்ல. இப்பொழுது, அதெல்லாம் சரிதான். அதுதான் நீங்கள் செய்யக் கூடிய சிறந்த காரியமாக இருந்து, வெறுமனே மனதில் சிந்தித்தோ அல்லது வெறுமனே, 'நல்லது, நான்... ஆமாம், நான் - நான் அதைக் காண்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்; நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறுவீர்களானால். அதன்பிறகு நீங்கள் அதை அந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்வீர்களானால், தொடர்ந்து இடைவிடாமல் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கொண்டிருங்கள். அதை உரத்த சத்தமாகக் கூறுங்கள். மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கொண்டிருங்கள்; அப்படியே தொடர்ந்து, 'நான் சுகமானேன். நான் சுகமானேன்' என்று கூறிக் கொண்டிருங்கள். நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசிக்கும் மட்டுமாக அதையே கூறிக் கொண்டிருங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கும் போது, அப்பொழுது தான் அது சம்பவிக்கப் போகிறது. நீங்கள் ஒரு எதிர்மறையான சாட்சியைக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள், 'நல்லது, நான் இன்னும் இன்றைக்கும் மோசமாகவே உணருகிறேன். நான் நினைக்கிறேன் நான்...' என்று அறிக்கை செய்யும் ஒவ்வொரு தடவையும். நீங்கள் சரியாக தொடக்கத்தில் இருந்த அதே குழியில் மீண்டும் நேராகப் போய் விடுவீர்கள். நீங்கள் அறிக்கையிடத் துவங்கினாலொழிய பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிற ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ இங்கே இல்லை. 'நான் பரிசுத்த ஆவியை இழந்து விட்டேன் என்று நம்புகிறேன். அது என்னை விட்டுப் போய் விட்டது என்று நம்புகிறேன். நான்... என்று நம்புகிறேன்' என்று அறிக்கையிடுவீர்களானால். நீங்கள் சரியாக கீழான நிலைக்குப் போய் விடுவீர்கள்; நீங்கள் ஒருபோதும்... மாட்டீர்கள். உங்களால்... கூடுமா. 10கூர்ந்து கவனியுங்கள். உங்கள் அறிக்கையைக் காட்டிலும் மேலாக, நீங்கள் ஜீவிக்கவே மாட்டீர்கள். இயேசு நம்முடைய அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராய் இருக்கிறார் (அது சரியா? இப்பொழுது, எபிரெயர் 3:1, 'வெளிப்படையாக அறிவித்தல்' என்ற அதே வார்த்தை தான் 'அறிக்கையிடுதல்' என்ற வார்த்தையாகவும் உள்ளது என்பதை கற்றறிந்த பண்டிதர் எவரும் அறிவர், அதே மொழிபெயர்ப்பு தான்.), இப்பொழுது அவர் எதன்பேரில் பரிந்து பேசுவதற்காக, பிதாவினுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்? நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசுவதற்காக. அவர் அதைச் செய்து விட்டார் என்று நீங்கள் முதலில் அறிக்கையிடும் மட்டுமாக உங்களுக்காக அவரால் எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் போது... இப்பொழுது, நான் சந்தோஷமடைந்து, சத்தமிட்ட காரணத்தினால், இன்றிரவு நான் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை... இரட்சிக்கப்படவில்லை. அதுவல்ல அது. தேவனுடைய வரம் என் வழியாக கிரியை செய்கிற காரணத்தினால் நான் இரட்சிக்கப்படவில்லை. என்னிடமிருந்து இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கும் நிபந்தனைகளை நான் நிறைவேற்றின காரணத்தினாலே தான் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேதாகமத்தின்படி இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். பாருங்கள்? அது சரியா? புரிகிறதா? பேரில்... நான் இரட்சிக்கப்பட்டிருப்பது போன்று உணருகிற காரணத்தினால் அல்ல. உங்களுடைய உணர்ச்சிகளின் பேரில் நீங்கள் அந்த அடிக்கட்டைக்கு துரிதமாக மறுபக்கம் திரும்பிப் போகும்படி செய்ய சாத்தானால் முடியும். ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்கும் போது, அவனால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? அவனால் அதைச் செய்ய முடியாது - அதற்குப் போக முடியாது. அவனால் அதைக் கடந்து சிரமத்துடன் நடந்து செல்ல முடியாது; அது அவனைத் தோற்கடித்து விடும். 11இப்பொழுது, நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாக விசுவாசித்த போது, உங்கள் இருக்கையில் உட்கார்ந்தபடி, வெளியிலோ - நீங்கள் எங்கே இருந்திருந்தாலும், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அறிக்கை பண்ணத் தொடங்கி, நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள் என்று ஜனங்களிடம் கூறினீர்கள். நல்லது, நீங்கள் தொடர்ந்து, 'நான் இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். ஜனங்கள், 'உனக்குள் எந்த வித்தியாசமும் காணப்படவில்லையே' என்று கூறினார்கள், ஆனால் அங்கே வித்தியாசம் இருந்தது என்பதை நீ நம்பினாய். அது சரியா? நீ தொடர்ந்து அறிக்கை செய்து கொண்டிருந்தாய், சற்று கழிந்து அது நீதிக்கேதுவாய் கிரியை செய்தது. இப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் அண்டைவீட்டார் எல்லாரும் மற்றும் அனைவரும் அறிந்து கொள்கின்றனர், ஏனென்றால் நீங்கள் அதை விசுவாசித்து, அதை அறிக்கை செய்தீர்கள். ஏன், என்ன சம்பவித்தது? எது உங்களை மாற்றினது? அவர் உங்கள் அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராய் இருந்து, பிதாவினுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து, நீங்கள் எதை அறிக்கை செய்கிறீர்களோ அதற்கான நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுது, சுகமளித்தலுக்கும் அதே காரியம் தான். நீங்கள் அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொண்டு, உங்கள் உணர்ச்சிகளை விட்டு விடுகிறீர்கள். அது உணர்ச்சிகளின் மூலமாக அல்ல; அது விசுவாசத்தின் மூலமாகவே. நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று கூறுங்கள்; நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; நீங்கள் சுகமாகி விட்டது போன்று நடந்து கொள்ளுங்கள்; சுகமளித்தலை விசுவாசிக்கிறவர்களோடு கூட சேர்ந்து கொள்ளுங்கள்; அப்போது தேவன் சரியாக உங்களை பரிபூரணமான முழு ஆரோக்கியத்துக்குக் கொண்டு வருவார்: அது தவறிப்போகவே செய்யாது. சற்றே ஒரு எடுத்துக்காட்டுடன் இதைத் தெளிவாக்குவோம். விசுவாசத்தைச் செயல்புரிய வைக்கவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் (உங்களுக்குப் புரிகிறதா?), அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் ஒரு சில நிமிடங்களில் இங்கே நமக்கு என்ன செய்வார் என்பதை நான் காணலாம். அறிகுறிகளை ஒருபோதும் பார்க்க வேண்டாம். சீமாட்டியே, நீங்கள் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற காரணத்தினால் (அதையே) நோக்கிப் பார்க்க வேண்டாம், அல்லது இங்கேயிருக்கும் இந்த வாலிபனே, தேவன் ஒரு பல்வலியைச் சுகப்படுத்துவதைக் காட்டிலும், அவருக்கு இது பெரிய காரியமல்ல (புரிகிறதா?), அது ஒரு துளி வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. 12ஆனால் இப்பொழுது, கவனியுங்கள். அவர் உங்கள் அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராய் இருக்கிறார். இப்பொழுது, அங்கே மோசமான நிலையிலுள்ள அறிகுறிகளை யாராவது கொண்டிருந்திருப்பார்கள் என்றால், அது யோனாவாகத்தான் இருக்கும், அவன் நினிவேக்குப் போய்க் கொண்டிருக்கும் போது தான் அந்த மோசமான அறிகுறிகளைக் கொண்டிருந்தான். அவன் பின்வாங்கி, நினிவேக்குப் போய்க் கொண்டிருந்தான், அல்லது, அவன் நினிவேக்குப் பதிலாக தர்சீசுக்குப் போய்க் கொண்டிருந்தான், அவன் தவறானக் கப்பலில், தவறானப் பாதையில் போய்க் கொண்டிருந்தான், அவன் ஒரு புயல்வீசும் கடலில் பின்வாங்கிப் போனவனாக ஓடிக் கொண்டிருந்தான். அவர்கள் அவனுடைய கைகளையும் கால்களையும் கட்டி, கப்பலை விட்டு வெளியே வீசி விட்டார்கள். அவன் கீழே சமுத்திரத்துக்குள் சென்றான். ஒரு திமிங்கலம் அவனை விழுங்கி விட்டு, எல்லா மீன்களும் செய்வது போன்று, அதனுடைய துடுப்புகளை (swimmer) இளைப்பாறப்பண்ணும்படி, அது சமுத்திரத்தின் அடிப்பாகத்திற்கு சென்று விட்டது. அங்கே தான் அவன் இருந்தான், அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டவனாக, பின்வாங்கிப் போனவனாக, ஒரு புயல்வீசும் கடலில், அநேக அடி ஆழ சமுத்திரத்தில் ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தான். யாருக்காவது அறிகுறிகள் இருந்திருக்க வேண்டுமானால், அது யோனாவாகத் தான் இருந்திருக்கும். அவன் இந்த பக்கமாக பார்த்தால், அது திமிங்கலத்தின் வயிறாக இருந்தது; அவன் எங்கு நோக்கினாலும், அது திமிங்கலத்தின் வயிறாகவே இருந்தது. ஆனால் அவன் அதை நோக்கிப் பார்க்க மறுத்து விட்டான். நீங்கள் நோக்கிப் பார்த்து, 'நான் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறேனே' என்று கூறலாம். வேறு யாரோ ஒருவர் நோக்கிப் பார்த்து, 'நல்லது, எனக்கு இருதயக் கோளாறு இருந்ததாக மருத்துவர் என்னிடம் கூறினார். எனக்கு கீல்வாதம் இருந்தது' என்று கூறலாம். அதைக் காண மறுத்து விடுங்கள்; அதை நம்பவும் மறுத்து விடுங்கள். அது உண்மை. 13யோனா, 'அவைகள் பொய்யான மாயைகள்' என்றான். அவன், 'நான் இன்னும் ஒருவிசை உமது பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன்' என்று தேவனிடம் கூறினான். அதற்குக் காரணம் என்னவென்றால், சாலமோன் அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணின போது, அவன், 'உமது ஜனங்கள் எங்காவது தொல்லையில் அகப்பட்டு, இந்த பரிசுத்த ஸ்லத்தை நோக்கி ஜெபம் பண்ணுவார்களானால், நீர் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டருளும்' என்று (ஜெபம்) பண்ணியிருந்தான். அவன் அதை விசுவாசித்தான், தேவன் சாலமோனுடைய ஜெபத்தைக் கேட்டருளினார் என்று யோனா விசுவாசித்து, இவ்வாறு கூறத் தொடங்கினான், 'நான் இந்த திமிங்கலத்தின் வயிற்றை நோக்கிப் பார்க்க மாட்டேன். என்னுடைய பின்வாங்கிப் போன நிலைமையைக் குறித்தும் நான் யோசித்துக் கொண்டிருக்க மாட்டேன். நான் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கியே பார்த்து, அறிக்கை செய்து கொண்டிருப்பேன்' என்று கூறினான். தேவனோ அங்கே கீழே ஆக்ஸிஜனை அனுப்பி, மூன்று பகலும் மூன்று இரவும் அவனை உயிரோடு வைத்திருந்து, அவனைச் சரியாக நினிவேயில் கொண்டு போய்ச் சேர்த்தார், அவன் அதைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தான். நல்லது, சாலமோன் அந்த ஜெபத்தை ஏறெடுத்திருப்பான் என்றால்... யோனாவுக்கு இருந்த நிலைமையைப் போன்று அல்லது அதில் பாதியாகிலும் இங்கேயிருக்கிற (உங்களில்) யாருக்கும் இல்லை. அவனுக்கிருந்த அறிகுறிகளைப் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு எதுவுமில்லை. நல்லது, அவன் அந்த நிலையில் இருந்து, ஒரு மனிதனுடைய கரங்களால், பூமிக்குரிய ஒரு மனிதனாகிய சாலமோனால் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தை நோக்கிப் பார்த்து, உட்கார்ந்து ஜெபித்து, சாலமோனுடைய ஜெபத்தில் விசுவாசம் கொள்ள அவனால் முடியுமானால், இன்றிரவு, நீங்களும் நானும் இங்கே உட்கார்ந்து, உங்கள் அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படியாக அங்கே தம்முடைய இரத்தத்தோடு தேவனுடைய வலது பாரிசத்தில் நின்று கொண்டிருக்கிற இயேசு இருக்கும் தேவனுடைய சிங்காசனத்தை எவ்வளவு அதிகமாக நோக்கிப் பார்க்க வேண்டும். அப்படியே அறிகுறிகளைக் கொண்டிருக்க மறுத்து விடுங்கள். 14அறிகுறிகள் என்பது இதைப் போன்ற ஏதோவொன்றாக உள்ளது, உதாரணமாக, இப்பொழுது நீங்கள் வீட்டுக்கு, உங்கள் ஸ்லத்திற்கு போகும் போது, நாளை துரித பார்சல் முகவர் (express agent) வந்து, 'நீங்கள் தான் திருமதி. ஜோவா?' என்று கேட்கிறான். 'ஆமாம்.' 'நான் உங்களுக்காக ஒரு பரிசை வைத்திருக்கிறேன்.' 'சரி. என்ன அது?' அவன் ஒரு-ஒரு கூடையை அல்லது பெட்டியைக் கொடுக்கிறான், அப்போது அந்தப் பெட்டியில் ஏதோவொன்று மோதி தட்டிக் கொண்டிருப்பதைக் கேட்கிறீர்கள். உடனே நீங்கள் அதனுள்ளே பார்க்கிறீர்கள். அதில் ஒரு பெரிய பெட்டி (நிறைய) பாம்புகள், கொடிய நச்சுப் பாம்புகள் இருக்கின்றன. நல்லது, அந்தக் காரியங்கள் உங்களுக்குப் பிடிக்காது. நல்லது, நீங்கள், 'எனக்கு இவைகள் வேண்டாம்' என்று கூறுகிறீர்கள். 'ஓ, ஆனால் இவைகள் உங்களுடையது தான். யாரோ இவைகளை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதோ உங்கள் பெயர் இருக்கிறது. இதோ பெயர் உள்ளது. யாரோ இந்தப் பாம்புகளை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்; இவைகள் உங்களுடையது தான். நீங்கள் இவைகளைப் பெற்றே ஆக வேண்டும்.' இப்பொழுது, ஒரு வகையில், அவைகள் உங்களுடையது தான், வேறொரு வகையில், அவைகள் உங்களுடையது அல்ல. யாரோ ஒருவர் அவைகளை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் நீங்கள் அவைகளைப் பெற்றுக்கொண்டதாக கையொப்பமிடும் மட்டுமாக அவைகள் உங்களுடையது அல்ல. நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொண்டதாகக் கையொப்பமிடும் போது, அவைகள் உங்களுடையதாகி விடுகிறது. ஆனால் நீங்கள் அவைகளுக்காக கையொப்பமிட மறுத்து விடுவீர்களானால், அவன் அவைகளை அந்த விரைவு பார்சல் நிறுவனத்திற்கே திருப்பி எடுத்துச் சென்றாக வேண்டும். அவைகளை உங்களுக்கு அனுப்பிய நபரிடமே அவைகளை அந்த விரைவு பார்சல் நிறுவனம் (திருப்பி) அனுப்பியாக வேண்டும். அது சரிதானா? நல்லது, பிசாசு கொண்டு வருகிற எதற்கும் நீங்கள் கையொப்பமிட வேண்டாம். இல்லை, ஐயா. அப்படியே அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுங்கள். இல்லை, ஐயா. 'நான் அதை வாங்க மாட்டேன். பிசாசே, நீ அவை எல்லாவற்றையும் திருப்பி எடுத்துச் சென்று விடு. அவ்வளவு தான். நான் அதை வாங்க மாட்டேன்' என்று கூறி விடுங்கள். உங்களுடைய வியாதிகளையோ, உங்களுடைய கீல்வாதத்தையோ, அது என்னவாக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுங்கள், 'நான் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன். அவருடைய தழும்புகளால் நான் குணமாகிறேன்' என்று (கூறுங்கள்). உங்கள் தீர்மானத்தில் உறுதியாக நில்லுங்கள். அதை அறிக்கை செய்யுங்கள். அதை விசுவாசித்து, அங்கேயே தரித்திருங்கள். தேவன் அதை நிறைவேற்றுவார். அது என்னவாக இருந்தாலும் காரியமில்லை, அப்படியே அவரை விசுவாசியுங்கள். 15சரி, நீங்கள் ஒரு அருமையான ஜனக்கூட்டமாக இருக்கிறீர்கள். நான்-நான் ஒரு பெரிய பிரசங்கி அல்ல, ஆனால் இன்றிரவு சிறிது பேச வேண்டுமென்று நிச்சயமாகவே விரும்பினேன், ஆனால் என்னால் முடியவில்லை. நான் இதை விட்டு... அப்பால் சென்று விடுவேனோ என்று நான்-நான் பயப்படுகிறேன். இப்பொழுது சுகமளித்தலின் அபிஷேகத்திற்காக முழுவதும் மணிக்கணக்காக ஜெபித்து விட்டு, வந்து, பிரசங்கம் பண்ணத் தொடங்கினேன், செய்ய வேண்டிய சரியான காரியம் அதுவல்ல. நான் கொஞ்சம் வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன், அதன்பிறகு நாம் ஜெப வரிசையை அழைப்போம். பரிசுத்த யோவான் 5-ம் அதிகாரம், 33, 33ம் வசனத்தில் துவங்குவோம். இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. 16உங்களுக்கு விருப்பமானால், நாம் சற்று நேரம் எல்லாவிடங்களிலும் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது உள்ளேயும் வெளியிலும் எல்லாவிடங்களிலும் இருக்கிற நண்பர்களே, ஆழமான உத்தமத்தோடு இருங்கள்... இப்பொழுது, நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய அவரை நோக்கிப் பார்ப்போம், அவருடைய நாமத்தினாலே, இரண்டு மூன்று பேர் (எங்கே) கூடியிருந்தாலும், அங்கே அவர் இருப்பார் என்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இப்பொழுது, கர்த்தாவே, நீர் சரியாக இங்கேயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். தேவனே, நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் வருவதற்கு எங்களுடைய சொந்த நாமமோ அல்லது தகுதிகளோ எதுவும் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் எங்களுடைய சொந்த நாமத்தில் உள்ளே வருவோமென்றால், நீர் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டீர். ஆனால் இன்றிரவு வியாதிப்பட்டுள்ள ஜனங்களைக் குறித்தும், உமது பிள்ளைகளாகிய இவர்களுடைய நிலைமைகளைக் குறித்தும் மிக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், நாங்கள் வருகிறோம், நாங்கள் அவருடைய நாமத்தில் வருவோமானால், எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீர் கேட்டருளுவீர் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற அவருடைய நாமத்தைத் தரித்துக்கொள்ளும் வரை அவ்வாறு செய்கிறோம். 'என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.' எனவே நாங்கள் அவருடைய நாமத்தில் வந்து, பரலோகத்தின் தேவனை, மகத்தான Amoyah-ஐ அறிந்து கொள்கிறோம்... இன்றிரவு இந்த சபையைக் கீழ்நோக்கிப் பாரும், வெளியே முற்றத்தில் நின்று கொண்டிருப்பவர்களையும், கீழே அடித்தளத்தில் இருக்கிறவர்களையும் நோக்கிப் பார்த்தருளும்... உம்முடைய அந்த மகத்தான எக்ஸ்-ரே கண்களைக் கொண்டு, மனிதனுடைய ஆத்துமாவுக்கு உண்மையைப் போன்று காணப்படுகிற எதுவுமே உமக்கு மறைவாயிருக்கவில்லை, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். ஒவ்வொரு நபரையும் உமக்குத் தெரியும். நீர் அறியாமல், ஒரு அடைக்கலான் குருவி (சிட்டுக்குருவி) கூட தெருக்களில் விழ முடியாது. நாங்கள் இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருக்கிறோம் என்று நீர் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்? பிதாவே, நீர்-நீர் இன்றிரவு எங்களுக்காக இதைச் செய்வீரா? 17உமது பார்வையில் எனக்கு தயவு கிடைக்குமானால், கர்த்தாவே... உம்மைச் சேவிக்க என்னால் சிறந்ததை முயற்சித்திருக்கிறேன், எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறேன், நான் அநேக தவறுகளைச் செய்திருக்கிறேன் என்றும், இன்றிரவு அறுப்புண்டு போகவே நான் பாத்திரனாயிருக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் கர்த்தாவே, அது - உம்முடைய கிருபையின் வழியாகவே நாங்கள் இங்கேயிருக்கிறோம். கர்த்தாவே, நீர் என்னிடம் கூறி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக, என்னை வெளியே அனுப்பினது முதற்கொண்டு, நான் தாழ்மையோடு இருக்கவே முயற்சித்திருக்கிறேன். நான் போக எனக்கு மகத்தான பெரிய இடங்கள் இருக்க வேண்டியதில்லை. சிறிய சபையே எனக்கு நன்றாக உள்ளது... நான் போக வேண்டுமென்று நீர் விரும்புகிறதைப் போல் காணப்படுகிற எந்த இடமாயிருந்தாலும், நான் அங்கு போகவே முயற்சிக்கிறேன். நான் எப்போதுமே எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தவே முயற்சித்திருக்கிறேன், அவர் அங்கே திரும்பவும் துவங்கி, உலகத்தின் முடிவுபரியந்தம் இந்த ஜனங்களோடு இருப்பதாக அவர் வாக்குப்பண்ணினதாக நான் உணருகிற கிரியைகளை செய்து முடிக்கவே முயற்சித்து, எல்லா துதியையும் மகிமையையும் அவருக்கே செலுத்திக் கொண்டிருக்கிறேன். 18இப்பொழுது, கர்த்தாவே, காத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனக்கூட்டத்தின் மேல் நோக்கிப் பாரும். மகத்தான தேவ ஆவியை அவர்கள் மேல் அனுப்பும். சுகமளித்தலின் தூதனானவர் தாமே, இன்றிரவு இந்தக் கட்டிடத்தின் மேல் தம்முடைய மகத்தான செட்டைகளை விரித்து எல்லா அவிசுவாசத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, சற்று கழிந்து இந்தப் பாளயத்தில் அவ்வளவு மகத்தான ஒரு சந்தோஷம் இருப்பதாக, கர்த்தாவே, இவர்கள் அவருடைய ஆசீர்வாதங்களின் கீழாக ஓடி வந்து, காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மகத்தான பெரிய இரக்கம் மற்றும் விசுவாசத்தின் பனித்துளிகள் அவருடைய செட்டைகளிலிருந்து ஒவ்வொரு நபரின் மேலும் இன்னுமாக விழுவதாக, அவர்கள் ஒவ்வொரு பாவத்திலிருந்தும் விடுதலை ஆவார்களாக, ஒவ்வொரு கட்டிலிருந்தும் விடுவிக்கப்படுவார்களாக, அவர்கள் வந்து, அவரைச் சேவித்து, தங்களுடைய வியாதிகளிலிருந்து சுகமடைவார்களாக. நாங்கள் இன்றிரவு எங்கள் தனிப்பட்ட வீடுகளுக்குப் போகும் போது, தேவனே, ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவருடைய பிரசன்னத்தின் நிமித்தமாக, எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போன்று, 'நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா' என்று நாங்கள் கூறுவோமாக. தேவனே, இந்தச் சிறிய சபையை ஆசீர்வதித்தருளும். ஒத்துழைப்பு கொடுத்து வருகிற ஒவ்வொரு சபையையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, ஏதோவொரு நாளில், உமக்குச் சித்தமானால், இந்த அழகான பட்டணத்திற்கு நாங்கள் திரும்பி வந்து, அங்கே அநேக, அநேக வாரங்களாக ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதலை நாங்கள் கொண்டிருக்கும்படி அருளும், அநேக காரியங்கள் செய்யப்படுவதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 19உங்களுக்கு நன்றி. இப்பொழுது, இன்றிரவு துவங்குவோம். அவர்கள் இன்று புதிய பிரிவு ஜெப அட்டைகள் எல்லாவற்றையும் விநியோகித்திருக்கிறார்கள், முழுவதும் புது பிரிவுகளாக உள்ள அநேக, அநேகமான ஜெப அட்டைகள், அவைகள் 'M' என்ற எழுத்தோடு துவங்குகிறது. இப்பொழுது, நாம்... கொண்டிருப்போம். ஒரே சமயத்தில் மிக அநேகர் நின்று கொண்டிருக்க முடியாது. நாம் இங்கே எத்தனை பேர் நிற்க முடியும்? சரி. அது யார், அவர்கள்... என்று கூறினார்களே. ஆமாம். சரி. சரி. மேய்ப்பர்களும், சகோதரன் பாக்ஸ்டர் அவர்களும், இவர்களும், நாம் ஒரே நேரத்தில் ஏறக்குறைய மூன்று பேர்களை அழைக்கலாம் என்று யோசனை கூறுகிறார்கள், ஏனென்றால் அப்பொழுது அவர்கள் நின்று கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம். சரி, அது அப்படியே அருமையாக இருக்கும். நல்லது, அப்படியானால் நாம் சரியாக முதலாவது எண்ணிலிருந்து துவங்கலாம், சரியாக அதிலிருந்து துவங்கலாம். M-1 யாரிடம் இருக்கிறது? அது எங்கேயிருக்கிறது? M-1, ஜெப அட்டை M-1. உங்கள் ஜெப அட்டையில் பாருங்கள், அவர்கள்... அது இவ்விதமான ஒரு சிறு அட்டையாக இருக்கும், அதன் முன்புறத்தில் உங்கள் பெயரும், முகவரியும் இருக்கும்; இங்கேயுள்ள இந்தப் பக்கத்தில்... இங்கே கீழேயுள்ள இந்தப் பக்கத்தில், ஒரு-ஒரு எழுத்து 'M' இருக்கிறது, அது 1ஆக இருக்கும். M-1, M-2, M-3. நம்மால் அவர்களை வெளியே கொண்டு வர முடியுமா என்று பார்ப்போம். அவர்களில் சிலர் வெளியிலிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்; அவர்களில் சிலர் பிற்பகல் கூட்டத்தில் இருந்தார்கள்; அவர்களில் சிலர் ஒருக்கால் அடித்தளத்தில் நின்று கொண்டு இருக்கலாம். எழுத்து ங என்று தொடங்கும் ஜெப அட்டைகளை வைத்திருக்கிற நீங்கள் எங்கேயிருந்தாலும், இப்பொழுது அழைக்கப்பட ஆயத்தமாயிருங்கள். நம்மிடம் M-1, M-2, M-3 ஆகியவை உள்ளன. அது போதுமானது...